அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்
பார்லியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 

பீர் தயாரித்தல்  : புளிக்க வைத்த பார்லியில் ஈஸ்ட் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  பார்லியில் உள்ள ஸ்டார்ச் உடைந்து குளுக்கோஸ் மற்றும் எத்தனாலாக ஈஸ்ட் மாற செய்கிறது. எஞ்சிய பகுதியை பழமையாக்கி பாதுகாத்து பருக ஏற்றவாறு மாற்றப்படுகிறது.  பொது 6 நிலைகளில் மாற்றம்.

மால்ட் : பார்லியானது 5 முதல் 7  நாட்கள் ஊறவைக்கப்படுகிறது.  இந்நேரத்தில் முளை வெளிவருவதால் அமைலேஸ் என்சைம் ஸ்டார்ச் குளுக்கோஸாக மாறுகிறது.  புரோட்டியேஸ் என்சைம் புரதம் உடைய செய்கிறது.  இந்த என்சைம்கள் நொதித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  ஏனெனில் இதுவே பார் தரத்தை நிர்ணயிப்பதாக உள்ளது.  முளைத்ததை காயவைத்து கசக்கப்படுகிறது. 

அரைத்தல் :அரைக்கும்போது ஸ்டார்ச் மற்றும் அதனில் உள்ள வாசனைகள் மற்றும் பாதுகாப்பான்கள் வெளிவருகின்றன.  இவற்றுடன் நீர் சேர்த்து வேகவைக்கப்டும்.  இந்த கலவையை 65-70 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலையில் பாதுகாப்பாக வைக்கும் போது ஸ்டார்ச் குளுக்கோஸாக மாறுகிறது.  வெப்பநிலை 75 டிகிரி செல்சியஸ் உயர்த்தும்போது என்சைம் செயல்படாமல் அடியில் போய் தங்குகிறது.  கரையாத பொருள் இறுத்து தெளிவாக பெரும் திரவம் வோர்ட் எனப்படும்.

கொதிக்க வைத்தல் : ஹாப்ஸ் வோர்ட்டும் சேர்த்து 2.5 மணிநேரம் கொதிக்க வைக்கப்பட்டு, திரவம் தனியாக பிரிக்கப்பட்டு புளிக்க வைக்கப்படுகிறது.  இவ்வாறு செய்வதால்

  • திடத் தன்மையடைகிறது
  • சுத்திகரிக்கப்பட்டு, நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது
  • என்சைம்கள் செயல்பாடு தடைப்படுத்தப்படுகிறது
  • ஹாப்ஸில் உள்ள கரையும் பொருள் சேர்வதால் மணம் பெறுவதோடு இதில் இயற்கையாக சில நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால் இவை பீர் கெட்டுப் போகாமல் பாதுகாக்க உதவுகின்றன.

புளிக்க வைத்தல் : புளிக்க வைக்க ஈஸ்ட் சாக்ரோமைசிஸ் கார்பரில் வோர்டில் சேர்க்கப்படுகிறது.  முதன்மை பொருளானது பழைய வேர்டில் இருந்து எடுக்கப்படுகிறது.  அதிக அடர்த்தியானது (500 கி 120 லிட்டர்) ஆகும்.  புளிக்க வைத்தல் என்பது குறைந்த வெப்பநிலையான 3.3 மற்றும் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 8 முதல் 14 நாள்.  இந்நேரத்தில் குளுக்கோஸானது எத்தனால் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு மாற்றுகிறது.
புளிக்க வைத்த வோர்ட் (பச்சை பீர்) பழைமையானதாக மாற்ற 0 டிகிரி செல்சியஸ் வாரம் அல்லது மாதக் கணக்கில் வைத்து பண்படுத்தப்படுகிறது.  அந்நேரத்தில் ஈஸ்டானது பாத்திரத்தின் அடியில் தங்குகிறது. கசப்பு மணத்தை உடையதாக மணமிக்கமாகவும் மாறுகிறது. 

முடிவடையும் நிலை : இந்நிலையில் வடிகட்டி, சுத்திகரித்து, கார்பன் 0.45 முதல் 0.52 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு சேர்க்கப்பட்டு தெளிய வைக்கப்படுகிறது. பீர் சுமார் 6 மாத காலம் வரை அதனுடைய பயன்பாட்டு காலம் உள்ளது அதன் பிறகு அதன் மணமானது வேறுபாடு அடைகிறது. 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015